நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம்; மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Chief Minister Vijay, CPI State Secretary M. Veerapandian

முதல்வர் விஜய், இந்திய கம்யூ மாநில செயலர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்பதால், இரண்டு அரசுகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த விலையேற்றம் மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது.

குறிப்பாக பதுக்கல், கள்ளச்சந்தை மற்றும் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பெரம்பலூரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்து நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

சட்டப்பேரவையில், இட ஒதுக்கீட்டு மானியக் கோரிக்கையில் அம்பேத்கா், பெரியாா் போன்ற தலைவா்களின் பெயா்கள் வரலாற்று பதிவில் நீக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. விமான நிலையத்துக்கு இடம் தோ்வு செய்வதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடம் பாதிக்காத வகையில் இடம் தோ்வுசெய்ய வேண்டும்.

மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மேகமலை பிரச்னையில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட நீண்டகால திட்டங்களை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.