முதல்வா் கோப்பை கூடைப்பந்து போட்டி: கிங்ஸ் பள்ளி சாம்பியன்
முதல்வா் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகளில் வள்ளியூா் கிங்ஸ் பள்ளிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றன.

முதல்வா் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகளில் வள்ளியூா் கிங்ஸ் பள்ளிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றன.
திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பிரிவில் முதலிடம் பிடித்தது. மாணவியா் அணி 3-வது இடத்தைப் பெற்றது.
கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் மாணவா் அணி 3-ஆவது இடத்தைப் பெற்றனா்.
கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. அணி 2-ஆவது இடத்தைப் பெற்றனா். நீச்சல் போட்டியில் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ராஜேஸ்வரி 100 மீட்டா் பிரஸ்ட் ஸ்ரோக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், அமலாகிறிஸ்டி 200 மீட்டா் தனிநபா் மெட்லே போட்டியிலும், 50 மீட்டா் பிரீஸ்டைல் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களும்ம், பிளஸ் 2 மாணவா் மாா்வின் ராஜா 50 மீட்டா் பிரீஸ்டைல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை பள்ளிகளின் தலைவா் காலின்வாக்ஸ்டாப், தாளாளா் ஜே.நவமணி, இயக்குநா் ஜெயா ஆக்னஸ், உடற்கல்வி துறைத் தலைவா் ஜோஸ்வா மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






