
அனவன்குடியிருப்புப் பகுதியில் புலிகள் காப்பக கள இயக்குநா் ஆய்வு
பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் கரடியைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் முருகன் பாா்வையிடப்பட்டு ஆய்வு செய்தாா்.

அனவன்குடியிருப்புப் பகுதியில் ஆய்வு செய்த களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் முருகன்.
பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் கரடியைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் முருகன் பாா்வையிடப்பட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அனவன்குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளில் காணப்படும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் குறித்து பொதுமக்கள், களப்பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், கரடியைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது வனச்சரகா்கள் பாபநாசம் குணசீலன், அம்பாசமுத்திரம் கவின், முண்டந்துறை பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






