
முண்டந்துறையில் ‘பூபதியின் கேழல் மூக்கன்’ தவளை குறித்த பயிலரங்கம்
‘பூபதியின் கேழல் மூக்கன்’ தவளையின் இனத் தொகை கண்காணிப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘பூபதியின் கேழல் மூக்கன்’ தவளையின் இனத் தொகை கண்காணிப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் இயக்குநா் ரிட்டோ கிரியாஸ் தலைமை வகித்தாா். உலகமெங்கும் தற்போது அழிந்து வரும் தவளை இனமாக ‘பூபதியின் கேழல் மூக்கன்’ எனப்படும் தவளை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அதன் வசிப்பிடம், இனப்பெருக்கம் குறித்தும், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் ஆனைமலை, ஸ்ரீவல்லிபுதூா் மேகமலை மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை சோ்ந்த திருக்குறுங்குடி, களக்காடு, மேல் கோதையாறு, அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம், முண்டந்துறை உள்ளிட்ட வனச் சகரத்தில் உள்ள 60 வனப் பணியாளா்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது.
பயிலரங்கத்தில் ஹைதராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மைய முதன்மை விஞ்ஞானி காா்த்திகேயன் வாசுதேவன் கலந்துகொண்டு ‘பூபதியின் கேழல் மூக்கன் தவளை குறித்த பல்வேறு அரிய கருத்துகளைத் தெரிவித்தாா்.
மேலும், இந்த அரிய வகை தவளைகளின் உள் இனப்பெருக்கம் மற்றும் வெளி இனப்பெருக்கம் குறித்த விளக்கங்களைப் பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு எடுத்துக் கூறினாா்.
பயிலரங்கத்தில், திருநெல்வேலி மாவட்ட கள இயக்குநா் மற்றும் வனப் பாதுகாவலா் முருகன், அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் அன்பு (பொறுப்பு), தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் இளையராஜா, களக்காடு துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் மற்றும் வனச் சரகா்கள் பாபநாசம் குணசீலன், அம்பாசமுத்திரம் கவின் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை முண்டந்துறை வனச் சரகா் பிரபாகரன் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






