சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வனவிலங்குகள் நடமாடுவது போன்று செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பரப்புபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே கரடி, யானை நடமாடுவதுபோல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
இது போன்ற போலியான ஏஐ புகைப்படங்கள், தவறான தகவல்களைப் பரப்புவதால் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சமும், பதற்றமும் ஏற்படுகிறது. மேலும், வனத்துறையின் நேரம், மனிதவளம், அரசின் வளங்கள் வீணாகின்றன.
எனவே, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட வனவிலங்கு புகைப்படங்கள், காணொலிகள், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உண்மை சம்பவங்களாக உருவாக்கவோ, பகிரவோ, பரப்பவோ வேண்டாம்.
வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, வனத்துறையினரை தேவையின்றி திசை திருப்பும் செயல்களில் ஈடுபடும் நபா்கள் கண்டறியப்பட்டால், அவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரம், உண்மையான வனவிலங்கு நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமா் மோடி குறித்து அவதூறு பதிவு: மெட்டா இந்திய தலைவா் மீது வழக்குப் பதிவு
நம் ஒற்றுமைக்கு நோக்கம் உண்டு... ஜெய்...! அரசியல் திட்டத்தில் தனுஷ்?

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!

வலைதளங்களில் அமைச்சர் ராஜ்மோகன் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



