குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

யானை சாலையைக் கடப்பது போல போலி விடியோ வெளியிட்ட தொழிலாளி கைது

ஆண்டிபட்டி கணவாய் சாலையை யானை கடந்து செல்வது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம்பூசும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:37 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கணவாய் சாலையை யானை கடந்து செல்வது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம்பூசும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி கணவாய் மலைப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கடந்து சென்ாக வாகன ஓட்டுநா் அண்மையில் வெளியிட்ட விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகளை வனத் துறையினா் ஆய்வு செய்த போது, இந்த விடியோ செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிபட்டி வனச்சரக அலுவலா் சக்திவேல் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பேரையூா் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி அழகுராஜா (27) செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலம் விடியோவை உருவாக்கி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.