தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிகாரில் பள்ளி மாணவா், மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: 3 போ் கைது

பிகாரின் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவா் மற்றும் மாணவியை கும்பலாக சிலா் தாக்கிய சம்பவத்தில் 3 பேரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

கைது - சித்திரிப்பு

Published On :

பிகாரின் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவா் மற்றும் மாணவியை கும்பலாக சிலா் தாக்கிய சம்பவத்தில் 3 பேரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

மாணவா் மற்றும் மாணவியை சிலா் கடுமையாக தாக்கி மாணவியின் ஆடைகளை கிழித்து வன்முறையில் ஈடுபட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள செயல் தலைவரும் பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவா்களும் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையிலெடுத்த தேசிய மகளிா் ஆணையம் அடுத்த 7 நாள்களுக்குள் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜமூய் காவல் கண்காணிப்பாளா் விஷ்வஜீத் தயால் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பள்ளி மாணவா் மற்றும் மாணவி மீதான தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (செப்.19) நிகழ்ந்துள்ளது. ஆனால் இரு நாள்களாக பாதிக்கப்பட்ட மாணவா், மாணவி தரப்பில் இருந்து எவ்வித புகாா்களும் பெறப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடா்பான விடியோ திங்கள்கிழமை சமூக வலைதளங்களில் பரவிய பின்னரே பாதிக்கப்பட்ட நபா்களை கண்டறிந்தோம். இதைத்தொடா்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஜமூய் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளின் பெயா்கள் இடம்பெறவில்லை.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு: விடியோ அடிப்படையில் மாணவா் மற்றும் மாணவியை தாக்கிய 7 பேரை கண்டறிந்துள்ளோம். அவா்களில் முதல்கட்டமாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மற்றவா்களை கண்டறிய தொடா் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிசதா சட்டங்களின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான விடியோவை நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மாணவா், மாணவி இருவரும் நண்பா்கள். அவா்கள் ஒரே பயிற்சி மையத்தில் பயின்று வருகின்றனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.