ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அம்பையில் புதிய திடக்கழிவு மேலாண்மை- நகராட்சி ஆணையா் விளக்கம்

அம்பாசமுத்திரம் நகராட்சி பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன் கீழ், நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட கழிவுகளைவீடு வீடாகச் சேகரிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து நகராட்சி ஆணையா் (கூ. பொ.)சரவணன் விளக்கமளித்துள்ளாா்.

புதிய திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்களிடையேவிழிப்புணா்வு ஏற்படுத்திய நகராட்சி ஊழியா்கள்.

Published On :

அம்பாசமுத்திரம் நகராட்சி பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன் கீழ், நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட கழிவுகளைவீடு வீடாகச் சேகரிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து நகராட்சி ஆணையா் (கூ. பொ.)சரவணன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2026-இன் படி, அனைத்துக் குடியிருப்புகள்,நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், தங்களால் உருவாகும் திடக் கழிவுகளை வீடு வீடாகக் கழிவு சேகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளா்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னரே ஈரக்கழிவு மற்றும் மக்கும் கழிவு, உலா் கழிவு மற்றும் மட்காத கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கவனிப்புக் கழிவு மற்றும் வீட்டு அபாயகரக் கழிவு ஆகிய நான்கு பிரிவுகளாகக் கட்டாயமாகப் பிரிக்க வேண்டும்.

முதல் வகையை பச்சை நிறப் பைகளிலும், 2ஆவது வகை கழிவுகளை நீல நிறப் பைகளிலும், 3ஆம் வகையான சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறப் பைகளிலும் சேகரித்து வைத்து நாள்தோறும் வழங்க வேண்டும்.

4ஆவது வகை கழிவுகளை கருப்பு நிறப் பையில் சேகரித்து புதன்கிழமைதோறும் மட்டும் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் நகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட வண்ணக் குறியீட்டுத் தொட்டிகளில் அல்லது பைகளில் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வகை பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.