பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா்

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

திடக்கழிவு மேலாண்மை தொடா்பான கூட்டத்தில் பேசுகிறாா் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன்.

Published On :

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-இன் படி குப்பைகளை 4 வகையாக பிரித்து வாங்க வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக பின்பற்றுவது தொடா்பாக நகராட்சி அலுவலா்களுடனான கூட்டம் ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், நகராட்சிப் பகுதியில் மக்கும் குப்பையான சமையல் கழிவுகள் காய்கறி மற்றும் பழத்தோல்கள், மக்காத குப்பையான பிளாஸ்டிக், காகிதம், உலோக கண்ணாடி, சுகாதாரக் கழிவுகளான நாப்கின், சிறப்பு பராமரிப்பு கழிவுகளான பயன்படாத பல்புகள், டியூப் லைட்டுகள், பேட்டரிகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என தனித்தனியாக பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து குப்பை பெறப்பட மாட்டாது. விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கழிவு நீா் கால்வாய் மற்றும் பொது இடங்களில் குப்பையை வீசக்கூடாது. பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.