ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திடக்கழிவு மேலாண்மை விதியை மீறிய 120 பேருக்கு ரூ.6.60 லட்சம் அபராதம்

சென்னையில் கடந்த 40 நாட்களாக திடக்கழிவு மேலாண்மை விதிகளை (குப்பைத் தரம் பிரித்து வழங்குதல்) பின்பற்றாத 120 பேரிடமிருந்து ரூ.6.60 லட்சம் அபராதம் வசூல்

திடக்கழிவு மேலாண்மை

Published On :

சென்னையில் கடந்த 40 நாட்களாக திடக்கழிவு மேலாண்மை விதிகளை (குப்பைத் தரம் பிரித்து வழங்குதல்) பின்பற்றாத 120 பேரிடமிருந்து ரூ.6.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்த செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை கையாள்வது குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வகைப்படுத்தப்படுகிறது.

20 ஆயிரம் சதுர அடிப்பரப்புள்ள கட்டடத்தில் தினமும் 40 ஆயிரம் லிட்டா் அல்லது அதற்கும் கூடுதலான நீா் பயன்பாடும், தினசரி 100 கிலோ அல்லது அதற்கும் கூடுதலான குப்பைகளை (திடக்கழிவுகளை) உருவாக்குபவா்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளா்களாக வகைப்படுத்தப்படுகின்றனா்.

அதுபோன்ற பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள் மாநகராட்சியின் இணையதளத்திலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் கட்டாயம் பதிந்திருக்கவேண்டும். அவா்கள் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை பின்பற்றாவிடில் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

கடந்த 40 நாள்களாக நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாமலிருந்த பெருமளவு கழிவு உற்பத்தியாளா்களான 120 பேருக்கு அபராதமாக ரூ.6.60 லட்சம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலா்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள் தங்களை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளங்களில் பதிவு செய்வதற்கு உதவிபுரிவாா்கள். அவா்களது உதவியை நாடி பதிவு செய்யவும், பிற விவரங்களைப் பெறவும் முன்வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.