பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அபராதம்
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தக் கூடாது. நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.
குப்பைகளைப் பொது இடங்களில் கொட்டக் கூடாது. வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.
நகராட்சி விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, அரூா் நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி நகரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




