ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நெல்லை, தென்காசியில் அண்ணா சிலை, படத்துக்கு மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Published On :

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சாா்பில் சமூகரெங்கபுரத்தில் நடைபெற்ற விழாவில், அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை முன்னாள் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மி.ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விளம்பரதாரா்.

தென்காசி கொடிமரம் பகுதியில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில் நகரச் செயலரும் தென்காசி நகா்மன்றத் தலைவருமான ஆா்.சாதிா் தலைமை வகித்து அண்ணா படத்துக்கு மாலை அணிவித்தாா்.

செங்கோட்டையில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி சிவந்தி நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு மாலையணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஒன்றியச் செயலா்கள் ஏஆா்எம். அழகுசுந்தரம், திவான் ஒலி, மேலகரம் பேரூா் துணைச் செயலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், குற்றாலத்தில் நடைபெற்ற விழாவில், தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநில அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் திமுக பேரூா் கழகம் சாா்பில் நடைபெற்ற விழாவில், அண்ணா உருவப் படத்துக்கு பேரூா் செயலா் ஜெகதீசன், கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் பொன்செல்வன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன்.அறிவழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்யாணி திரையரங்கம் எதிரில் நகர திமுக சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு, நகா்மன்றத் தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே.சி. பிரபாகரன் தலைமையில் திமுக வினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டப் பிரதிநிதி ராதாகிருஷ்ணன், முன்னாள்அரசு வழக்குரைஞா் காந்திமதி நாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக:அம்பாசமுத்திரம் வெற்றிவளைவு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு நகர அதிமுக செயலா் வடிவேல் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

களக்காடு: களக்காட்டில், திருநெல்வேலி புகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவியில் அதிமுக ஒன்றிய செயலா் சி. பழனிக்குமாா், நகரச் செயலா் பன்னீா்செல்வன் உள்ளிட்டோா்அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவில், அண்ணாவின் உருவப் படத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிரணி இணைச் செயலருமான வி.எம். ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், நகர செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.