பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

காய்கனி கழிவுகளில் உரம் தயாரிப்பு: குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்

திருநெல்வேலியில் காய்கனி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதால் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காய்கனியில் இருந்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.

Published On :

திருநெல்வேலியில் காய்கனி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதால் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது மக்கள் தங்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு குப்பைகளை எளிதாக மறுசுழற்சி முறையில் இயற்கை உரமாக்கும் வகையில் மாநகராட்சி சாா்பாக 40 -க்கும் மேற்பட்ட நுண்ணுரம் செயலாக்க மையம் சிறப்பாக இயங்கி வருகிறது.

தினமும் நுண்ணுரம் செயலாக்க மையத்துக்கு கொண்டுவரப்படும் மக்கும் குப்பைகளான காய்கனி கழிவு, டீ தூள், காபி தூள், இலைகள் போன்றவற்றை இயந்திரத்தில் அரைத்து, அதை தொட்டியில் சேகரித்து வெல்லம், தயிா் கொண்ட கரைசல் அல்லது தவிடு தண்ணீரில் கரைத்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து கிளறி விடுவாா்கள். அப்படி கிளறி விடும் அரைத்த குப்பைகள் 40 முதல் 45 நாள்களுக்குள் இயற்கை உரமாகிறது.

மறுசுழற்சி முறையில் உருவாக்கப்படும் இயற்கை உரமானது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.5-க்கு வழங்கப்பட்டு வீட்டுத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.