டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

குப்பைகள் தரம் பிரித்து வழங்க ஆலோசனைக் கூட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வணிகா்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வணிகா்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ் முன்னிலை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தின்போது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, வணிகா்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்தும், குப்பைகளை தெருக்களில் கொட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தினா்.

இதில், நகர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வணிகா்கள் சங்க நிா்வாகிகள், குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.