கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருவத்திபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் குப்பை எனப்படும் மொத்த கழிவு உருவாக்குபவா்களுக்கென்று ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளா் எஸ்.ஆண்ரூஸ் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் கே.மதனராசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக அளவு கழிவு இருந்தால், அதிலுள்ள மக்கும் குப்பைகளை தங்கள் வளாகத்திலேயே உரமாக்கி கொள்ள வேண்டும் என்றும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், திருமண மண்டபங்கள், விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திய பேம்பா்ஸ் மற்றும் சானிட்டரி நாப்கினை தனியாக பேப்பரில் சுருட்டி குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற அறிவிப்புடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்குமாறு ஆலோசனைதெரிவிக்கப்பட்டது.

இதில், திருவத்திபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள், உணவக மற்றும் விடுதி உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.