ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு
ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு இப்போது உள்ள குடும்ப அட்டைகளை, மேலும் ஓராண்டு செல்லத்தக்க வகையில் நீட்டிப்பு செய்துள்ளது. இதனால் உள்தாள் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் ஆறுமுகனேரிக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்கு சோமசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஏ.கே.எல்.கூட்டுறவு பண்டக சாலையில் அமைந்துள்ள இரு ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.
நாள்வாரியாக எத்தனை பேர் உள்தாள் பெற்றுச் சென்றுள்ளனர் என்ற விபரத்தை அவர் கேட்டறிந்தார்.
பின்னர் கோட்டாட்சியர் கொங்கன் கூறியதாவது, திருச்செந்தூர் கோட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...