அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு

ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:39 pm

தினமணி

ஆறுமுகனேரி ரேஷன் கடைகளில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு இப்போது உள்ள குடும்ப அட்டைகளை, மேலும் ஓராண்டு செல்லத்தக்க வகையில் நீட்டிப்பு செய்துள்ளது. இதனால் உள்தாள் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் ஆறுமுகனேரிக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்கு சோமசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஏ.கே.எல்.கூட்டுறவு பண்டக சாலையில் அமைந்துள்ள இரு ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.

நாள்வாரியாக எத்தனை பேர் உள்தாள் பெற்றுச் சென்றுள்ளனர் என்ற விபரத்தை அவர் கேட்டறிந்தார்.

பின்னர் கோட்டாட்சியர் கொங்கன் கூறியதாவது, திருச்செந்தூர் கோட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்புப் பணி  மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.