இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

சாத்தான்குளம் அருகே கோயிலை சேதப்படுத்த முயன்றதாக இளைஞர் கைது

சாத்தான்குளம் அருகே கோயிலை சேதப்படுத்த முயன்றதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை தப்பவிட்டதாகக் கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :

சாத்தான்குளம் அருகே கோயிலை சேதப்படுத்த முயன்றதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை தப்பவிட்டதாகக் கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் சிந்தாமணி செல்லும் சாலையில் ஸ்ரீதடிக்காரன் சுவாமிகோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஆயுதங்களால் கோயிலைத் தாக்கி சேதப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர் முத்துராமன் (38) மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து அவர்களை தடுத்து கண்டித்தனராம். ஆனால் 3 பேரும் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

உடனே கிராம மக்கள் இருவரைப் பிடித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த இளைஞர்களை போலீஸார் கண்டித்து அனுப்பினராம். இதையறிந்த மாவட்ட இந்து முன்னணித் தலைவர் வி.எஸ்.முருகேசன், மாவட்ட பொதுச்செயலர் பெ. சக்திவேலன் உள்ளிட்டோர் மீரான்குளம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினருடன் 40 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திடீரென அனைவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்து இதுகுறித்து முறையிட்டனர். மேலும் பேய்க்குளம் பகுதியில் கோயில் சிலைகள் காணாமல் போவதாகவும்,சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

அப்போது காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எழிலரசன், அக் கோயிலைச் சேதப்படுத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அதில் தொடர்புடைய நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சூசைமிக்கேல் மகன் அல்போன்ஸ்ராஜாவை கைது செய்துவிட்டதாகவும், மற்ற இருவரை தேடி வருவதாகம் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.