லாரி மோதி இளைஞர் சாவு
தூத்துக்குடியில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு குருவிக்குளம், வடக்கு ரதவீதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சதீஷ்போஸ் (21). இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரித்து வந்தார்.
இவர், சிப்காட் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மீளவிட்டான் பாலம் அருகே அந்த வழியாகச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் சதீஷ்போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், இவர் மீது மோதிய லாரி, அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

