ஆறுமுகனேரியில் 11 அடி வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அங்கிருந்து இரவு 7 மணிக்கு விநாயகர் ரத ஊர்வலம் புறப்பட்டு, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இந்து முன்னணிச் செயலர் எம்.கசமுத்து, திருச்செந்தூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ஜி.ராமசாமி, ஆறுமுகனேரி நகரத் தலைவர் பி.சேர்மத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதன்கிழமை (செப். 16) ஆறுமுகனேரியில் பல்வேறு இடங்களில் 35 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 19ஆம் தேதி மாலையில் 108 விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்கிறது. அங்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

