ஒப்பந்ததாரர் நிர்வாக மேலாளருக்கு அரிவாள் வெட்டு:ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் நிறுத்தம்
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியிடத்தில் ஒப்பந்ததாரர் நிர்வாக மேலாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியிடத்தில் ஒப்பந்ததாரர் நிர்வாக மேலாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி அணை தூர்வாரும் பணியில் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி தன்தலையைச் சேர்ந்த ராமு மகன் சந்துரு (35), ஒப்பந்ததாரரின் நிர்வாக மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை பணி நடைபெற்று கொண்டிருந்தபோது அங்குவந்த மர்மநபர்கள், லாரியில் கூடுதலாக வண்டல் மண்ணை ஏற்றும்படி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அதற்கு சந்துரு மறுத்ததால் மர்மநபர்கள் அரிவாளால் அவரை வெட்டினராம்.
இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. தகவலறிந்துவந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் தூர்வாரும் இடத்திலிருந்து குறிப்பிட்ட அளவைவிட அதிகளவு மணல் அள்ளிச் சென்ற 6 லாரிகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

