டிராக்டரில் இருந்து தவறி விழுந்த இரு இளைஞர்கள் காயம்
கோவில்பட்டி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
கோவில்பட்டி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
கோவில்பட்டியையடுத்த கீழப்பாண்டவர்மங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிச்செல்வம் (19). இவர் ஓட்டிச் சென்ற டிராக்டரில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் தங்கத்துரை(20) மற்றும் மந்தித்தோப்பு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுல்ராஜ் மகன் கார்த்திக்(19) ஆகியோர் இருந்தனராம்.
ஈராச்சி காட்டுப் பகுதியிலிருந்து நாற்றுப்படப்பை ஏற்றிக் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிராக்டரிலிருந்த தங்கத்துரை, கார்த்திக் ஆகிய இருவரும் தவறி கீழே விழுந்தனராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்கத்துரை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

