சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குளத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணிக்கு குளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். வேப்பலோடை அன்னை தெரசா பொதுநலச் சங்கத் தலைவர் முனியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் தொடங்கிய பேரணி ராமசந்திராபுரம், குளத்தூர் காலனி, தெற்கு கல்மேடு, பனையூர், கலைஞானபுரம், கல்லூரணி வழியாகச் சென்று குளத்தூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

பின்னர் பள்ளியில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக் கூட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆசிரியர் மரியஅனிதா, சுயஉதவிக் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன் ஆகியோர் பேசினர்.

குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர்கள் பாபநாசம், ஆதிலிங்கம், குளத்தூர் கிராம வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் பிரேமா சின்னச்சாமி, ஜேம்ஸ் அமிர்தராஜ், மேட்டுபனையூர் ஊராட்சித் தலைவர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.