கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு
கோவில்பட்டியையடுத்த குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியையடுத்த குலசேகரபுரம் என்ற பெருமாள்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பெருமாள்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை ராஜா எம்.பி. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவி வசந்தா தேவி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலர் பாலமுருகன், நிர்வாகக் குழு உறுப்பினர் முத்துக்குமார், விவசாயிகள் சங்க வட்டச் செயலர் லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் சேதுராமலிங்கம், எட்டயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

