ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சிறு தொழில் முனைவோருக்கு நாளை சிறப்பு கடன் முகாம்

குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெறுகிறது.

Updated On :

குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் சிறப்புத் திட்டமான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில்கள்,சேவைத் தொழில்கள் தொடங்குவதற்கும் சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் குறைந்த வட்டியில் சொத்து பிணையமின்றி வங்கியில் கடன் பெறும் விதமாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக சிசு பிரிவில் ரூ.50,000 வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100-க்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் முத்ரா அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

கிஷோர் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5 லட்சம் வரையிலான தருண் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் முகாம் திங்கள்கிழமை (செப்.28) தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.

முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசுத் துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்துகொள்ள உள்ளனர்.

ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.