சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆழ்வார்திருநகரி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சர் சண்முகநாதன்  சனிக்கிழமை நிதிஉதவி அளித்தார்.

Updated On :

ஆழ்வார்திருநகரி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சர் சண்முகநாதன்  சனிக்கிழமை நிதிஉதவி அளித்தார்.

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பத்தவாசல் பகுதியில் 22 தொகுப்பு வீடுகள் 1986ஆம் ஆண்டு கட்டப்பட்டன. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல்முருகன் என்பவரது வீட்டின் மேல்பகுதி வெள்ளிக்கிழமை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த செந்தில்வேல்முருகனின் மனைவி திருச்செல்வி, மகள் ராஜேஸ்வரி, மகன் தினேஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் சண்முகநாதன் சனிக்கிழமை விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் வீடு இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதிஉதவி அளித்தார். அப்போது திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வருவாய் ஆய்வாளர் தனுஷ்கோடி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜ்நாராயணன், பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மற்றொரு சம்பவம்:

சாத்தான்குளம்:சாத்தான்குளம் அருகே பூச்சிக்காடு மாலைசூடுதட்டு தெருவைச் சேர்ந்தவர் நயினார் (65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார், ஊராட்சி உறுப்பினர் சுயம்புலிங்கம் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் பழுதடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.