இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சாத்தான்குளத்தில் அய்யா அவதார தின ஊர்வலம்

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி தர்மயுக தர்மபதியில் அய்யாவின் 184 ஆவது அவதார தினத்தையொட்டி வியாழக்கிழமை அன்புக் கொடி மக்களின் ஊர்வலம் நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி தர்மயுக தர்மபதியில் அய்யாவின் 184 ஆவது அவதார தினத்தையொட்டி வியாழக்கிழமை அன்புக் கொடி மக்களின் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த தர்மயுக தர்மபதியில் 28 ஆம் ஆண்டு திருவிழா பிப். 26 ஆம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு பூஜைகளும், மாலையில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அய்யாவின் 184 ஆவது அவதார திருநாளையொட்டி அன்புக் கொடிமக்களின் ஊர்வலம்  நடைபெற்றது.

கோயில் முன்பிருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது. இதில் திரளான அய்யாவின் அன்புகொடி மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது.

மார்ச் 11 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும், 12 ஆம் தேதி அய்யா சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன் ஆகியோரின் இகனை திருக்கல்யாணமும், 13 ஆம் தேதி பகல் உச்சிப்படிப்பு, மாலை 6.30 மணிக்கு உகப்படிப்பு, அன்னதர்மம், நள்ளிரவு பட்டாபிஷேகம் ஆகியன நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனர்,

இதேபோல் சாத்தான்குளம் பண்டாரசெட்டிவிளை அய்யா வைகுண்ட சுவாமி தர்மபதியில் 184 ஆவது உதய திருவிழா புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 9 மணிக்கு அய்யா உதய திருவிடம் மரிகடல் பதம் எடுத்து வருதலும், 2 ஆம் நாளான வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி உதய திருவிழா காட்சி, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம், இரவு 8 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை தர்மம் வழங்கல் ஆகியன நடைபெற்றன. ஏற்பாடுகளை தர்மபதி நிர்வாக கண்காணிப்பாளர் சேர்மத்துரை தலைமையில் தர்மகர்த்தா குழுவினர் செய்திருந்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மா பூமாதேவி ஆலயத்தில் அய்யா அவதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 7.31 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜை:  ஸ்ரீமுப்பிடாரி அம்மன் திருக்கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை சீற்றத்தை தணிக்கவும், விவசாயம் மற்றும் செல்வ வளம் சிறக்க வேண்டி 108  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.