கோவில்பட்டியில் நகராட்சி அண்ணா துப்புரவுப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் வேறு தகவல்களை எழுப்பும், மாற்று சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகராட்சி அண்ணா துப்புரவுப் பணியாளர் சங்கத் தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். பொருளாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். கெளரவத் தலைவர் சண்முகநாதன், துணைச் செயலர் தங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், பொம்மியம்மாள் முருகன், மாயாண்டி, பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.