நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாலுமாவடி கோயிலில் 1,008 திருவிளக்கு வழிபாடு

குரும்பூர் அருகே  நாலுமாவடியில் உள்ள அருள்மிகு பாதக்கரை சுவாமி கோயிலில் படக்கஞ்சித் திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:56 am

DIN

குரும்பூர் அருகே  நாலுமாவடியில் உள்ள அருள்மிகு பாதக்கரை சுவாமி கோயிலில் படக்கஞ்சித் திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி  செவ்வாய்க்கிழமை காலை அன்னதானம், மகா கணபதி  ஹோமம்,நவக்கிரக, சுதர்சன ஹோமங்கள், கோபூஜை உள்ளிட்டவை நடை பெற்றது. தொடர்ந்து,  சுவாமி,   பரிவார தெய்வங்களுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனை, பகலில் சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. பிற்பகலில் பக்தர்களுக்கு படக்கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், வணிகம், தொழில்கள் பெருகவும்,  குடும்பங்களில் ஒற்றுமை நிலவவும் வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றன. 
இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இரவில் அன்னதானம், சிறப்பு பூஜை  நடைபெற்றது. ஏற்பாடுகளை நாலுமாவடி ஊர்மக்கள் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


சாத்தான்குளம் விநாயகர் கோயிலிலில்...
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் கோயிலிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலிலில் ஸ்ரீசபரிகிரிவாசன் மகர ஜோதி ஐயப்ப பக்தர்கள் குழுவின் 20ஆவது ஆண்டு மண்டல பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி கோயிலிலில் காலை 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை,  பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம்,  இரவு 7மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. திருவிளக்கு பூஜையை எம்.குருசாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். 
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், கோயில் தர்மகர்த்தா விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.