தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு பெற இன்று முதல் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 10) தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 10) தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான முகாம் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தொடங்கப்பட்டது. தற்போது வரை 10965  குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு 8976 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக,  மக்கள் பயன்பாட்டுக்காக ஒரே நாளில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.  தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளான சங்கரப்பேரி, மீளவிட்டான்,  அத்திமரப்பட்டி, முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடி ரூரல் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (நவ.10) முதல் நடத்தப்படுகிறது.
 மண்டல வாரியாக நவ. 21 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கான தொகையை செலுத்திய ஒரிரு தினங்களில குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது. எனவே,  பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com