யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேசிய சட்டப் பணிகள் தின பேரணி

தூத்துக்குடியில்  தேசிய சட்டப் பணிகள் தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:17 pm

DIN

தூத்துக்குடியில்  தேசிய சட்டப் பணிகள் தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஏழை எளிய மக்களுக்கும் நீதிபெறுவதில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சட்டப்பணிகள் ஆணைய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி, ஆண்டுதோறும் நவ. 9 ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய சட்டப்பணிகள் தின நடைபயண பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது. ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கிய இப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி என். ராஜசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன், சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சார்பு நீதிமன்ற நீதிபதியும்,  வட்ட சட்டப் பணி ஆணைக் குழுத் தலைவருமான பாபுலால் தலைமை வகித்தார்.
 குற்றவியல் நீதிமன்ற எண்:1   நடுவர் ஜெயசுதாகர், வழக்குரைஞர் ஸ்ரீரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள 25  பேர் கலந்துகொண்டனர். கைதிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் கிடைக்கக் கூடிய உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து வழக்குரைஞர்கள் சந்திரசேகர், முத்துராமலிங்கம், ரவி, கனிராஜ் ஆகியோர் பேசினர்.
வழக்குரைஞர் சந்திரசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறைக் கண்காணிப்பாளர் முகம்மதுஆசிப் வரவேற்றார். ஏற்பாடுகளை சட்ட உதவி மையச் செயலர் தாமரைச்செல்வன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.