எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

"மின்னணு குடும்ப அட்டையில் திருத்தப் பணி: வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை முகாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 11) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 11) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, மாதம்தோறும் 2ஆவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  அதன்படி, நவம்பர் மாத சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 11) காலை 10  முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் - நீக்குதல், சேதமடைந்த அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்படும்.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியிருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.