47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு மருத்துவமனை செவிலியரை தாக்கிய இளைஞர் கைது

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:18 pm

DIN

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வடசேரி ஒட்டுபுரை தெருவைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜிஜின்தேவ்(28),  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை  இரவு  அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போது, திருச்செந்தூர் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த தனராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அப்போது அவருடன் வந்த அவரது நண்பர் அடைக்கலாபுரம் சேகர் மகன் மகேஷ்(32) ,  தனராஜிக்கு போர்வை கேட்டு , செவிலிலியர் ஜிஜின்தேவிடம் வாக்குவாதம் செய்து  அவரது  சட்டை பிடித்து இழுத்து தாக்கி மிரட்டினாராம்.
 இதுகுறித்து ஜிஜின்தேவ் திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  உதவி ஆய்வாளர்  கருப்பசாமி வழக்குப் பதிந்தார்.   ஆய்வாளர் ரகுராஜன் விசாரணை நடத்தி மகேஷை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.