அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:46 am

DIN

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார்.  செயலர் கேசவன் கூட்டறிக்கையை வாசித்தார்.  பொருளாளர் ராசையா வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  8ஆவது ஊதியக் குழு ஓய்வூதிய அரசாணை 313  சம்பந்தமாக ஓய்வூதியம் கணக்கிடும் முறை குறித்து சங்கத் துணைத் தலைவர் ராஜாமணி விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், 1-1-2016  முதல் 30-9-2017 வரை ஓய்வூதிய நிலுவைத் தொகையை  உடனே வழங்க வேண்டும்.  மருத்துவப் படியை  மத்திய அரசு போல் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  சங்க உறுப்பினர் ஜனகராஜ் வரவேற்றார்.  கோபாலகிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.