கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 42 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டும் கழகம் சார்பில் ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வளாக நேர்காணலுக்கு, நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த், முருகபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். நேர்காணலில் இக்கல்லூரியைச் சேர்ந்த 90 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச் சுற்றுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்ற மாணவர், மாணவிகளை கல்லூரிச் செயலர் செல்வராஜ், முதல்வர் (பொ) கிருஷ்ணசாமி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.