சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காயல்பட்டினத்தில் பாஜக கொடியேற்று விழா

காயல்பட்டினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் 38ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப்  பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:58 am

காயல்பட்டினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் 38ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப்  பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
நகர பாஜக தலைவர் பண்டாரம் தலைமை வகித்தார். நகர அமைப்பு பொதுச்செயலர் சுயம்புலிலிங்கம், பொதுச் செயலர் செபஸ்டியான் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காளிமுத்து வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணராஜ் கட்சிக் கொடியேற்றினார். 
மாவட்டச் செயலர் சிவமுருகன் அதித்தன் இனிப்பு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச் செயலர் தங்கபாண்டியன், மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலர் நெல்லையம்மாள், காயல்பட்டினம் நகர இளைஞர் அணி பொதுச்செயலர் ராஜேஷ், நகர துணைத் தலைவர் பாலமுருகன், மகேஷ்வரி, ஆறுமுகனேரி சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர இளைஞர் அணித்  தலைவர் ராஜதிருமால் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.