தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சலவை நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும்: ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது சலவைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:26 pm

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது சலவைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் என். வெங்கடேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
சலவைத் தொழிலாளர்கள் மனு: ஸ்ரீவைகுண்டம் சலவைத் தொழிலாளர் சங்கத் தலைவர் குட்டியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
சலவைத் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த 70 குடும்பத்தினர் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணிகளை சலவை செய்து வருகிறோம். எங்களுக்காக கடந்த 1970 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபராங்குசநல்லூர் சாலைக்கு வடபுறம் 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தில் கிணறு அமைத்து, மின்மோட்டார் வைத்து சலவை செய்வதற்காக 12 அறைகளும், மீதம் உள்ள இடம் சலவை செய்த துணிகளை உலர்த்துவற்கு என சலவை நிலையமும் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சலவை நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அந்த சலவை நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும்.
கல்வி உரிமை மீட்புக் குழு: கல்வி உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஞானராஜ் தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: ஆறுமுகனேரி சாகுபுரம் பகுதியில் உள்ள பள்ளியில், தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பல மாணவர்கள் இலவசமாக படித்து வருகிறார்கள். தற்போது அவர்கள் 3 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். நிகழ் கல்வியாண்டுக்கான படிப்பு ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தினால்தான் தேர்வு எழுத முடியும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு 60 மாணவர்களும் தொடர்ந்து படிக்க உதவிட வேண்டும்.
மதுபானக் கடையை இடமாற்ற கோரிக்கை: தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் அளித்த மனு:
சாயர்புரம் கடைவீதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு மது அருந்த வருவோர், அந்த வழியாக கல்லூரி, பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்து வருகிறார்கள். எனவே, சாயர்புரம் கடைவீதியில் உள்ள மதுபானக் கடையை ஊருக்கு வெளியே வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
வருவாய் இழப்பு: விளாத்திகுளம் வட்டம், அயன்செங்கல்படை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 237.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அதனை வேருடன் அகற்ற ஒப்பந்தம் விட்டால் ரூ. 60 லட்சம் வரை ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும். இந்த நிலையில் தனிநபர் ஒருவருக்கு குறைந்த அளவில் ஒப்பந்தம் விட ஏற்பாடு நடப்பதாக தெரியவருகிறது. அப்படி நடந்தால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் பொது ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரச் சீர்கேடு: தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச் சங்கத்தின் தலைவர் முருகபூபதி, செயலர் 
சுந்தரராஜ், பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் அளித்த மனு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகளில்  ஆங்காங்கே மாடுகளும், பன்றிகளும் சுற்றித்திரியும் நிலை உள்ளது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.