மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

"நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறுவோர் ஏப். 30-க்குள் ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்'

நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஏப். 30ஆம் தேதிக்குள்

Updated On :9 ஏப்ரல் 2018, 12:55 am

நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை ஏப். 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க. பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2018-2019 ஆம் ஆண்டு நேர்காணலுக்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), எண் 1, விக்டோரியா தெருவில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்.
அலுவலகத்துக்கு நேரில் வரும்போது, ஆயுள் சான்று அசல் (சான்றொப்பமிட்ட புகைப்படத்துடன்), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (நாளது தேதிவரை பதிவு செய்தது), கடந்த ஆண்டு  அலுவலகத்தில் கொடுத்த அட்டை, ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.