மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயில் பயணத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

ரயில் பயணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:00 am

ரயில் பயணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சைல்டு லைன் 1098 அமைப்பு ஆகியவை சார்பில், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலியல் ரீதியான பிரச்னைகள் மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் இதுபோன்ற அவசர உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் 1098 அமைப்பு ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தெரிவித்தார்.
முகாமில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுப்படுத்துனர் ஜான் மோசஸ் கிரிதரன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், காவலர்கள் கிருஷ்ண தீபா, முத்துலட்சுமி, ரயில் நிலைய மேலாளர் பாஸ்கரன்,  உதவி மேலாளர் லேனல் மற்றும் ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.