கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரில் சுகாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனராம். இதுகுறித்து ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும், தாமஸ் நகர் பகுதியில் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாருகாலை முறையாக சுத்தம் செய்யவது இல்லை. குப்பைகளை முறையாக அகற்றாததால் தெருக்களில் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றதாம்.
எனவே, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும். கொசுத் தொல்லையை முற்றிலும் அகற்ற வேண்டும். தாமஸ் நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி மர்மக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள ஹாக்கி மைதானம் அருகே குப்பைகள் சேருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமையில், வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், கட்சியின் கிறிஸ்துவ ஜனநாயகப் பேரவையைச் சேர்ந்த அமல்ராஜ், கட்சியின் ஒன்றியச் செயலர் மாடசாமி, தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் இசக்கிமுத்து, இளைஞரணியைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அனிதாவிடம் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

