தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காயல்பட்டினத்தில்  அபூர்வ துஆ பிரார்த்தனை

காயல்பட்டினத்தில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் சபை சார்பில் உலக நன்மைக்காக அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:09 am IST

காயல்பட்டினத்தில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் சபை சார்பில் உலக நன்மைக்காக அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அமைப்பின் 91ஆவது ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக  நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உலக அமைதி வேண்டியும்,  நல்ல மழை வேண்டியும் அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 
ஹாமிதிய்யா மதரஸா சபை பேராசிரியர் காஜாமுஹ்யத்தீன் தமிழில் மொழி பெயர்த்து ஓதினார். இந்த பிரார்த்தனையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி,  கேரளம்,  கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.  
நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் லீக்  தலைவரும்,  முன்னாள் எம்.பி.யுமான காதர் முகைதீன்,  கடையநல்லூர் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.  நேர்ச்சை விநியோகம் வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.