சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:02 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா நடைபெற்றது. 
விழாவுக்கு கல்லூரி  முதல்வர் வேல்ராஜன் தலைமை வகித்தார்.  துணைமுதல்வர் மகேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மாணவி கிளாடிஸ் மில்கா வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக நாகர்கோவில்,  லயோலா கல்லூரி வணிக மேலாண்மை துறைத் தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு, 'தொழில்முனைவோர்''  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  
தொழில் தொடங்க திட்டமிடுதல் பற்றியும், மாவட்ட தொழில்துறை அலுவலகத்தில் தொழில் பதிவு செய்யும் முறை பற்றியும், வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்யும் முறை பற்றியும்,  திட்ட அறிக்கை தயாரிப்பதைப் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். இதில்,  வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள்  ஜெயந்தி, எமிலிலி,நர்மதா, ஐகோட் மகராசி  ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.