இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேர் கைது

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:05 am IST

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 13 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸார் இந்திய மாணவர் சங்க நிர்வாகள் இசக்கிமாரி, மாசானம், மாரிசெல்வம், ஜாய்சன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை தென்பாகம் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
 இதையெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலர் தா. ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலர் பூமயில் உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.