தூத்துக்குடியில் சிவில் சர்வீசஸ் தின விழா
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12ஆவது சிவில் சர்வீசஸ் தின விழா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12ஆவது சிவில் சர்வீசஸ் தின விழா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அவர் பேசியது: குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கழிவறையை பயன்படுத்த கற்றுத் தந்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் கழிவறையை சுத்தமாக வைத்து, குழந்தைகளை அந்தக் கழிவறைகளை உபயோகப்படுத்த வைக்கவேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எஸ். முத்துலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை இயக்குநர் வே. தேவிகா, கோவில்பட்டி மருத்துவ அலுவலர் ஜெயசெல்வராணி, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் திருமால், குழந்தை பாதுகாப்பு அலுவலர் பி. ஜோதிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...