தூத்துக்குடியில் மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாதாகோயில் தெரு, லயன்ஸ் டவுன், கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை மின்சாரம் விநியோகம் தடைபட்டது. இதுதொடர்பாக, அந்தப் பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சரியான பதிலை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், சீரான மின்சார விநியோகம் செய்ய வலியுறுத்தியும் மாதா கோயில் முன்பு பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மின்மாற்றி திடீரென பழுது ஏற்பட்டதால் சரியாக மின்சாரம் விநியோகிக்க முடியவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.