வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:56 pm

DIN

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில்  திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.  அதையடுத்து, சிறப்பு பூஜைகளும், கொடிமரத்துக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கோயில் தர்மகர்த்தா ஆர்.ஜி.என்.மாடசாமி மற்றும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மண்டகப்படிதாரர்கள், பொதுமக்கள் மங்களப் பொருள்களுடன் யானை முன் செல்ல, நாகசுவரம் முழங்க,  ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். 
அதை தொடர்ந்து, காலை சுமார் 6.30  மணிக்கு  கொடியேற்றப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் கொடிமரத்துக்கு மஞ்சள், பால், புனித நீர் ஊற்றினர்.  
விழாவில், நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் கோயில் செயலர் மாணிக்கம், பொருளாளர் கணேசன்  உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன் திருக்கோயில் குழுவினர் மற்றும் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.