எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து நடைபயணத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை கைது செய்த போலீஸாரைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தெற்கு பஜார் ஜில்விலாஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், அந்தோணிசெல்வம், ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ரயில்வே இருப்புப் பாதையை விரிவுபடுத்துவதால் பாதிப்புக்கு உள்ளாகும் காந்திநகர், இந்திரா நகர் மக்களுக்கு அணுகுசாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து என் நிலம் என் உரிமை என்ற தலைப்பில் நடைபயணப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, நகரச் செயலர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி மகளிா் ஆணையத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும்: லதா குப்தா

வளைகுடா நாடுகளில் தொடரும் தாக்குதல்கள்: பின்னணியில் ஈரான் ஆதரவு அமைப்புகள்

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

இன்றைய ராசி பலன்கள் (28.7.2026) 12 ராசிகளுக்கும்! கன்னி ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


