தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.3) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:35 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.3) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது. 
அதன்படி, தூத்துக்குடி வட்டம் வர்த்தகரெட்டிபட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர், திருச்செந்தூர் வட்டம் நாலுமாவடி, சாத்தான்குளம் வட்டம் கொம்பன்குளம்,  கோவில்பட்டி வட்டம் பிள்ளையார்நத்தம், விளாத்திகுளம் வட்டம் வெளவால்தொத்தி, எட்டயபுரம் வட்டம் மாசார்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் மேலப்பாண்டியாபுரம், கயத்தாறு வட்டம் கட்டாலங்குளம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை,  பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.