தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.3) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் வர்த்தகரெட்டிபட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர், திருச்செந்தூர் வட்டம் நாலுமாவடி, சாத்தான்குளம் வட்டம் கொம்பன்குளம், கோவில்பட்டி வட்டம் பிள்ளையார்நத்தம், விளாத்திகுளம் வட்டம் வெளவால்தொத்தி, எட்டயபுரம் வட்டம் மாசார்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் மேலப்பாண்டியாபுரம், கயத்தாறு வட்டம் கட்டாலங்குளம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!

பாரதியின் சக்தி வழிபாட்டுச் சிந்தனை

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


