காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா இன்று தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா திங்கள்கிழமை (ஆக. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா திங்கள்கிழமை (ஆக. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வீரமாமுனிவர் பங்குகுருவாக பணியாற்றிய இவ்வாலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பரலோக மாதாவின் பாதுகாவலரான மிக்கேல் ஆண்டகையின் திருவுருவ பவனி நடைபெறும். தொடர்ந்து, கொடி மரம் கட்டப்பட்டு, கொடி மரத்தில் ஆலயக் கொடி, இறைமக்கள் கொண்டு வரும் வண்ணக்கொடிகள் அணிவகுப்பாக கட்டப்படும்.
மதுரை பேராயர் பாளை அப்போஸ்தலிக்கபரிபாலகர் அந்தோணி பாப்புசாமி, திருச்சி புனித பவுல் குருமடத்தைச் சேர்ந்த எம்.எஸ். அந்தோணிசாமி, என்.ஜி.ஓ. ஏ காலனி பங்குத்தந்தை அருள்அம்புரோஸ் ஆகியோர் ஆசீர்வதிக்க, கொடியேற்றம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பேராயர் வரவேற்பு மற்றும் நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆலய பங்குத்தந்தைகள் மறையுரை வழங்குகின்றனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மறையுரை நடைபெறும். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 12ஆம் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை விழா, 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் மாலை ஆராதனை நடைபெறுகிறது. 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, இறைமக்களின் கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில், உதவி பங்குத்தந்தை சுந்தர், அருள்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய பகுதி இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

